Friday, March 15, 2024

பார்க்கில் பராக் பார்க்காதவை ...


தலைப்பு ரொம்ப வித்யாசமா இருக்கா? பார்த்ததை பத்தி எழுதலாம் , பார்க்காததை பத்தியும் கேட்காததை பத்தியும் எழுதலாமா? தப்பில்லை ? கரெக்ட். தப்பு தான். :)

ஆனா நான் இப்போ எழுதப்போறது நான் பார்க்கில் பார்க்காதது பத்தி தான் !!!

கடந்த 3 மாசமா , கால் கட்டு போட்டு (அடிபட்டு ங்க, அந்த அடிக்கு கால் கட்டு போட்டு 20 வருஷம் ஆச்சு ...அதை சொல்லலை ....எப்பா ன்னா அடி , நான் அவருக்கு சொன்னேன் ). 

சொல்ல வந்ததை விட்டு எங்கேயா போய்ட்டேன் கடந்த 3 மாசமா கால் கட்டு போட்டு வீட்டுக்குள்ளேயே சுத்தி சுத்தி கூட வர முடியாம , ஒரே இடத்தில் உக்காந்துக்கிட்டே சுத்தி மட்டும் கையில் கிடைச்சா எதிர்லே வரது யாரா இருந்தாலும் ஒரே போடு , ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது அப்படினு வெறுப்பின் உச்சியில் உட்கார்ந்தே பொழுது கழிச்சேன். 

சரி இந்த நேரத்தை நிறைய உருப்படியா எழுதலாம்னு யோசிச்சா , மண்டை வேலை செய்யவே இல்லை. மூளை ,ஒருக்கால் எனக்கு மட்டும் அடிபட்ட கால்லே இருக்கோ என்னவோ ? ரொம்ப ட்ரை பண்ணி அப்புறம் அந்த முயற்சியே "கை" விட்டுட்டேன் . 

போன வாரம் ஒரு வழியா எனக்கு நடக்கறதுக்கு green சிக்னல் கொடுத்தாச்சு. ரொம்ப தூரம் இல்லைனாலும் பக்கத்துக்கு தெருக்காவது போக முடியுது. பார்க் போக முடியலைனாலும் பார்க் பண்ணி வெச்சு இருக்கற கார் வரைக்குமாவது போயிட்டு வர முடியுது . 2 நாள் வெளியே போயிட்டு வந்ததுனாலே இன்னிக்கி மூளை கொஞ்சம் தூங்கி எழுந்துரிச்சு இருக்கு. நம்ம நட தான் போச்சு எழுத்து நடையாவது இருக்கானு பார்க்க , இன்னிக்கி இந்த blog . படிச்சுட்டு சொல்லுங்க உங்க கமெண்ட்ஸ். என்னைய மாதிரி என் எழுத்தும் மறுபடியும் நடை பழகணுமோ? .

ஒரு விஷயம் இல்லாத அப்போ தான் அதோட அருமை தெரியம் அப்படிங்கறது ரொம்ப உண்மை.

நிறைய விஷயம் அன்றாட வாழ்க்கையே "take it for granted " ஆ எடுத்துக்கறோம் . அதுக்கு ரொம்ப feel பண்ணிட்டேன். ஆனா இந்த 3 மாசம் , நிறைய பேரோட ஒரிஜினல் முகத்தை காட்டிச்சு . அதுவும் நல்லதுக்கு தான் . எது எப்படியோ , இனிமே என் health கால் தூசினு நினைக்காம , காலும் கருத்துமா பாத்துக்கணும் னு காலபைரவர் கிட்டே வேண்டிகிட்டேன் .

நம்பிக்கை ஒருக்காலும் கைவிடாது .

கால் பத்தி நிறையே பேசிட்டேனு (போன்)கால் மேல கால் போட்டு என்னைய  திட்டாதீங்க . 

இப்போ எல்லாம் ஓகே.  (k)all's well that ends well.


Love

-U


Friday, September 22, 2023

பார்க்கில் பராக் பார்த்தவை ….(2) எத்தனை கோடி முகங்கள் வைத்தாய் இறைவா

 ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு பராக்கு பார்த்த போஸ்ட்.
(உடனே ரொம்ப நாளைக்கு அப்புறமா வாக்கிங் ,அப்படி தானே ?அப்படினு கேட்டு என் மனச கஷ்டப்படுத்த கூடாது.!!!.)

இன்னிக்கி வழக்கமான பார்க்கில் தான் வாக்கிங் படலம். அங்கே ஒரு 60 வயது மதிக்கதக்க பெரியவரும் வாக்கிங்கில் இருந்தார். கொஞ்ச நேரமாகவே கொஞ்சம் டென்ஷன் ஆக யாருக்கோ போன் ட்ரை செய்து கொண்டிருந்தார். லைன் கிடைக்கவில்லை போலும். கவலை கலந்த கோபம் அவர் முகத்தில். சிறிது நேரத்தில் அவர் போன் அடித்தது. பேசியதில் இருந்து அவர் மனைவி என்று உணரலாம். ஒரு 5 நிமிட உரையாடலில் அந்த பெரியவரில் அத்தனை உணர்வுகள் , உணர்ச்சிகள், பலப்பல முகங்கள். 

பெரியவர்: ஏய். நீ பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கும் போது மாப்பிள்ளை போன் பன்றாருனு சொல்லி வெச்சுட்டு போயிட்ட. அவரு ஏன் உனக்கு போன் பன்றாரு? எப்பவும் அது தானே கூப்பிடும். என்ன ஏதாவது பிரச்சனையா என்ன? அது நல்லா இருக்குல? பாப்பா நல்லா இருக்குல?(குரலில் அப்படி ஒரு பயம் கலந்த பதட்டம்)

போனின் மறுபக்கம்: *******

பெரியவர்: என்னது? பொறந்த நாள் கொண்டாட்டமா? அது சரி. ஆடு , மாடு எல்லாம் தான் பொறக்குது. இல்லை தெரியாம தான் கேக்கறேன் உன் பொண்ணுக்கு என்ன வயசு ஆகுது. பொறந்த நாள் கொண்டாடற வயசா இது. அவளுக்கே ஒரு பொண்ணு இருக்கு , உன் மாப்பிள்ளைக்கு மறந்து போச்சாக்கும்.ஊரிலே இல்லாத பொண்டாட்டி. பொம்பள புள்ளய பெத்து வெச்சு இருக்கோமே , 1008 செலவு வரும் , காசு செக்கணும் னு அறிவு உன் பொண்ணுக்கு தான் இல்லைனா , அதுக்குனு வந்து இருக்கு பாரு ஜாடிக்கு ஏத்த மூடி. பொண்டாடி பொறந்த நாள் கொண்டாறாராம் பொறந்த நாள். இல்ல , நான் தெரியாம தான் கேக்கறேன் உன் பொண்ணு நம்ம வீட்டிலே இருந்த வரைக்கும் ஒழுங்கா தானே டி இருந்தா? (குரலில் அவ்வளவு கோவம்)

போனின் மறுபக்கம்: ********

பெரியவர்: போனை அணைத்து விட்டு சட்டை பையில் வைத்துகொண்டு நடையை தொடருகிறார்.

இங்கே தான் அவரின் அடுத்த முகம். போனை பையில் வைத்தவுடன் ஒரு சிறு புன்முறுவல். வானை பார்த்து ஒரு சந்தோஷ சிரிப்பு. நடையில் ஒரு உற்சாகம். மாப்பிள்ளை வருங்காலத்திற்கு சேமிக்கவில்லையோ என்று பதறிய அதே தந்தை , தன் மகளின் பிறந்த நாளை ஒருத்தன் இவ்வளவு உற்சாகமாக கொண்டாடுவதில் அத்தனை ஆனந்தம் கொள்கிறார். தன் வீட்டு இளவரசி இன்னோரு வீட்டி ராணியாய் இருப்பதில் அவ்வளவு பெருமிதம் அத்தந்தைக்கு.

நான் பல இடங்களில் கண்ட ஒன்று. மாமியாருக்கும் மருமகளுக்கும் உள்ள "Ego" சில நேரம் பாச போர்வை போர்த்தி கொண்டுள்ளது. ஆனால் , மாமனாருக்கும் மாப்பிள்ளைக்கும் இடையே உள்ள பாசமோ பல நேரம் "Ego" வேடம் போட்டு கொண்டிருக்கிறது.


-உங்கள்

U

 


Saturday, August 5, 2023

Goodie goodie good morning darling

 என் அம்மா என்னை தினமும் இப்படி தான் எழுப்புவாள். அந்த Good morning கேட்கும் பொழுதே ஒரு புது உற்சாகம் பிறக்கும். 

சமீபமாய் அந்த நினைவு , என் போன் அலாரத்தில் அந்த வாக்கியம் வைத்தேன். காலை எழும் போதே அதே “Goodie goodie good morning darling” கேட்கலாம் என்ற எண்ணம். அலாரம் அடித்த பின் தான் ,இலையுதிரும் என் மண்டையில் (மரமண்டை) உதித்தது , உற்சாகம் தந்தது வார்த்தைகளில்லை , அவள் குரல் என்று. 

அவள் எழுப்பிய வரை எல்லா morningம் goodie goodie good morning தான் , எல்லா day உம் 100% Good day தான். அவளுக்கு பின் எல்லாமே 50-50 தான் என்றாகி போனது !!! 


Monday, June 19, 2023

Life - A recall

 கால் கட்டு போடுவதற்கு முந்தைய காலத்தில்,

கால் நகத்தி்ல் , கால் பிஞ்சிறுந்தாலும் ,

சுளுக்கு என்ன , அழுக்கு கூட வரக்கூடாது என்பதாலும்,

கால் மேல் கால் போட்டு , தரையில் கால் படாமல் ,

காள், காள் என்று அம்மாவை வேலை வாங்கிய

அதே நாம் தான் !


கால் கட்டுண்ட பிறகு,

கால் பகுதி காலே எடுத்து , முக்காலானாலும்,

ஏன் , காலனே வந்தாலும்,

கால் மணி நேரமாவது அவகாசம் கிடைத்தால் ,

காலை வேலைகளையும் , காலத்திற்கும் , நமக்கு பதில் ஒரு ஏற்பாட்டையும் , 

முடித்தால் தான் நிம்மதி என ஒத்தக்காலில் ஓடுகிறோம் !

எல்லாம் காலத்தின் கோலம் !!


பி்.கு

உன் கால்ல வேணும்னாலும் விழறேன் , இத கவிதை னு மட்டும் சொல்லாதனு நீங்க கேட்கறது என் கால்ல sorry காதுல விழத்தான் செய்யுது. நானா சொல்லல யாராவது சொன்னா company பொறுப்பேற்காது . , but எதுவா இருந்தா என்ன நல்லா தானே இருக்குன்னு நினைச்சீங்கன்னா நீங்க என்ன call பண்ண கூட பாராட்டலாம் 😄

Monday, May 22, 2023

#NoTitle

 No blog . 






இது என்னடா செம்மையான blog ஆ இருக்கேன்னு யோசிக்கிறீங்களா? இது தான் இப்போ trend. அட ஆமாங்க ! Recent ஆ இப்படி நிறைய என் கண்ணுல படுது !! 🤦‍♀️

முதல்ல insta ல #nofilter அப்படின்னு ஆரம்பிச்சாங்க . அதாவது ஆண்டாண்டு காலமா நம்ம எடுத்த photo வே அப்படியே பார்த்து பழகி , புதுசா யாரோ எங்கேயோ ஒரு filter கண்டுபடிக்க , இப்ப சாதாரணமா photo போட்டாலும் , அதுக்கு #nofilter அப்படின்னு் ஒரு special caption கொடுத்து , சாதாவ special சாதா்ஆக்கிட்டோம். 

அப்புறம் #nomakeup . அந்த மாதிரி கூதல் வேலை நான் கேள்வி் பட்டதேயில்லப்பா சாமி. அதாவது photo பாத்தா பளிச்சின்னு் இருக்கும் ஆனா #nomakeup tag இருக்கும் !

அவங்க பளிச்னு இருந்தா உனக்கு ஏன்மா பொறாமை னு் நீங்க கேட்கிறது எனக்கும் கேட்குது் ஆனா அதில்லை விஷயம் . அவுங்க #nomakeup போடறது எல்லாம் #nofilter இல்லையாம். அதாவது makeup நமக்கு போடாம photoக்கு் போடனும் . 

இது எல்லாத்தையும் மிஞ்சற மாதிரி இன்னிக்கி ஒரு post பார்த்தேன் . #nocaption. Wow . Seriously dude seriously . Caption வைக்க வேண்டாம்னா வேண்டாம் அதுக்காக இப்படியா? 

இத அப்படியே கொஞ்சம் extrapolate பண்ணி பாருங்களேன் . நீங்க office க்கு daily வீட்டிலே இருந்து lunch எடுத்துட்டு போறீங்க. அன்னிக்கு box திறந்து பார்த்தா உங்க அம்மா box உள்ள ஒரு பேப்பர் ல #nolunch அப்படின்னு் எழுதி வெச்சி இருந்தாங்கன்னா எப்படி் இருக்கும் . Same feelings . 

6 மணி்க்கு breaking news னு ad போட்டுட்டு #nonews னா? Same feelings . 

இப்போ புரியுதா இந்த blogக்கான காரணம் . நம்மள அழகா காட்டிகிறது தப்பு் இல்ல , ஆனா நம்ம எத அழகுன்னு define பண்றோம் தான் பிரச்சனையே. என்னோட adolescent விட இப்போ குழப்பம் நிறைய இருக்கோனு தோணுது. அதுக்காக நான் அகத்தின் அழகு அப்படின்னு் எல்லாம் தத்துவம் சொல்லலை. 

அடுத்தவர்களை அழ வைக்காத அழுக்கும் அழகே !!!


#nocomments அப்படின்னு நான் சொல்லலை , நீங்க தாராளமா கமெண்டலாம் :) 





Wednesday, May 17, 2023

அன்னையர் தினம்

 கங்காருவை போல் எப்பொழுதுமே 

வயிற்றில் சுமக்க முடியவில்லை என்றாலும்

உள்ளத்தில் சுமந்திருப்பேனே!


ஆக்டோபஸை போல் உயிர் நீத்து 

உயிர் தரவி்ல்லை என்றாலும் , 

உயிரில் பாதி் தந்திருப்பேனே !


என் அன்னையை போல் 

உயர்ந்தவளில்லை என்றாலும் , 

நானும் ஓர் அன்னை என்று பூரித்திருப்பேனே !


ஏன் வர மறுத்தாய் பூ மகளே !!!


Tuesday, April 11, 2023

Laptop

 எனக்கு அவளை பிடிக்கவில்லை !

எப்பொழுதும் அவளுடனே நீ !!

சில நேரங்களில் அருகில் ,

சில நேரங்களில் மடியில் , 

பல நேரங்களில் நம்மிருவருக்கும் நடுவில் .

இந்த work from home வராமல் இருந்த வரை,

நீ வீட்டில் இருக்கும் பொழுது ஓரமாய் , தூங்கி இருந்தவள் , இன்று உன்னை அழைத்தே என்னை கொல்கிறாள் . 


#laptop #workfromhome