Sunday, August 18, 2019

எழுத்து

கவிதை எழுத விழைகின்றேன்
எதை எழுத, விழிக்கின்றேன்.
என்னை எழுதவா?
எண்ணற்ற உயிரை எழுதவா?
௨ன்னை எழுதவா, உலகை எழுதவா?

எறும்பை எழுதினாலும் என்னெழுத்து என்பதால் கூத்தாடும் ஒரு கூட்டம்,
அதே காரணமாய், ஆண்டவனையே எழுதினாலும்
கூச்சலிடும் மற்றொரு கூட்டம்.

நாட்டை பேசினால் நையாண்டி பேசுவர்
நாராயணனை எழுதினால்
நாத்திகர் உதைப்பர்.

பெண்களுக்கு எதிரான அவலம் எழுதலாமென்றால்
பெண்களே அலங்கோலமாய் எழுதுகிறார்.

விலைவாசியை எழுதவா
விலை கொடுத்து எதையும் வாங்கலாம் என்பவரை எழுதவா.

மிருகவதை எழுதவா?
மனிதனை மிருகத்தோடு ஒப்பிடாதீர், அவை வருத்தப்படும் என்று ௭ழுதவா?

உலக வெப்பமாவதையா?
எனக்கென்ன, என் வீட்டில் ஏசி வேண்டும் என்பவராயா ?

எதை எழுதினாலும் ஏகத்தாளமும், எதிர்மறையும் வேண்டாம்.
என் எழுத்திற்கு அழ தெரியாது
அழ வைக்கவும் தெரியாது.

பூ, பூவையர், அன்பு, ஆண்டவன், காதல் என காரணமில்லாமல் கிறுக்கவும் முடியாது.

அழகாய் ஒன்றை தாருங்கள் நான் எழுதுவதற்கு.
அழகில்லாமல் கேட்கவில்லை
அனைத்தும் அழகானதால்
பிரித்தெடுக்க முடியவில்லை.







Friday, August 9, 2019



கலர் கலர் சோப்பு குமிழிகளாய் வாழ்க்கை
கையில் பிடிக்கவும் முடியாமல்
தொலைதூரம் துரத்தும் முடியாமல்

ரசிக்க மட்டுமே,  ௨ள்ளவரை
உள்ளவர்களோடு
உள்ளத்தோடு