Tuesday, August 24, 2021

To all the men I care

 அமைதி கொள் ஆண்மகனே


பல நேரங்களில் பெண்டிருக்கு இணையாய் அழுத்ததிலிருப்பவன் நீ!

அழுத்தம் வெவ்வேறானாலும், ஆபத்து ஒன்று தான்.

உன் சூப்பர் மேன் இமேஐ் கூட

உன் சுயத்தை மறக்கத்தான் , என்பதறிவாயோ ?


குடும்ப பாரம் தாளாமல் அழும் பெண்கள் ஏராளம் !

அழது ஓய்ந்த பின்னும் மீண்டும் சுமக்க புறப்படும் அத்துணிவு தாராளம் !!

அந்த கண்ணீரும் உனக்கு தடையோ?

அத்தனையும் தேக்கி வைக்கும் , உன் உள்ள மடையோ ?


ஆஸ்பத்திரி படுக்கையில் கூட அமைதியாய் அயர முடியாத நிலை!

பண ஏற்பாடு முதல் , பாதியில் விட்ட பிராஜக்ட் வரை

கவலையோ கவலை !!


அம்மையும் அப்பனும் அன்பு கொட்டவும் , ஆசீர்வதிக்கவுமே முடியும் , ஆயுளை நீட்டிக்க முடியாது !

வாழ்வை பங்கு் போட வந்தவளாலும் , வலியை பங்கு போட முடியாது !!

நீ உயிர் தந்த மகனோ , மகளோ ! அவ்வுயிரையும் உனக்கு திருப்பி தர முடியாது !!

உனக்கு நீயே என்றுணர் !!!


நான் பார்த்து கொள்கிறேன் , என மார் தட்டவும் வேண்டாம் ,

எனை பார்த்துக்கொள் என்று மண்டியிடவும் வேண்டாம் !


பெற்றவரோ , மற்றவரோ , வீட்டுக்காரியோ, ரோட்டுக்காரியோ , உன்னை முன்னிறுத்து !

இது சுயநலமல்ல !! அவரவருக்கு இருக்க வேண்டிய 

மன நலம் !!!


வேரை நன்கு ஊன்றி , சத்துக்களை உறிஞ்சும் மரமே அதிக பயன் தரும் ! அது சுயநலம் என்று வேரை சுருக்கினால் ? பட்டுப்போனால் ? 


உணர்ந்து கொள் . ஊன் காக்க சத்துக்களை உறிஞ்சு . களை எடு. உள்ளம் பேண். உன்னை உயர்த்து ! 

பின் நீ வீட்டுக்கென்ன நாட்டுக்கே தலைவன் !!!