Monday, February 14, 2022

Are we still in romance ?

 குறுகுறு பார்வையில் பிறந்து 

ஊடலில் கூடி

கூடலில் பெருகி

ஸ்பரிசத்தில் சிலிர்த்து

ஒன்றரக் கலந்து,

இப்படியாய் நம் காதல்!!!

இது தான் காதல் என்றுணர எத்தனை எத்தனை !!!

நீ இல்லாமல் நானில்லை என்பதல்ல , நீ இருந்தால் தான் நான் , “நான்” - என்பதை விளக்கியது வாழ்கை , மிக சமீபமாய்.

உனக்கு நான் அழகாய் தெரிய அலங்காரம் வேண்டாம் , என் அலங்காரமே நீ என்றுணர வைத்த தருணம்.

உனக்கு தெரிந்த ஒரே உணர்வு கோபம் என்று எண்ணிய எனக்கு , உன் கோபத்தின் உள்ளேயும்  பார்க்க கற்று தந்தது , காலம்.

நீயும் நானும் அல்ல காதல் , நீயே நான் என்பதே !!!

நம் காதல் “Romance” அல்ல , “Enhance” !


Happy Valentines..


Love 

-U-