Thursday, July 23, 2020

U r still young...hey நான் என்ன சொன்னேன்....

சமீபத்திய ஒரு “வெற்றிகரமான” டிவி சேனல்லே ஒரு ப்ரோக்ராம். (ப்ரோகிராம் பழசு தான், நான் இப்போ தான் பார்த்தேன்). அந்த டிவிலே சமீப காலமாக, அவர் எல்லா ப்ரோக்ராம்லேயும் வருவார். அந்த சேனல்லே எப்பவுமே இப்படித்தான் , ஒருத்தர் கிடைச்சா போதுமே Advertisement ஆரம்பிச்சு , award function வரைக்கும், அவரையே வெச்சு செய்வார்கள் . அப்படி தான், இந்த நபரும். Usual a இவரை எல்லா ப்ரோக்ராம்லேயும் வயசானவர்னு கலாய்ப்பாங்க. He also seems a bit older than the rest of his team. நானும் நிறைய ப்ரோக்ராம்லே அவரை பார்த்து “பரவாயில்லையே, இந்த ஏஜ்லேயயும் இவளோ நல்ல டான்ஸ் கூட ஆடறாரே”னு நிறைய நாள் யோசிச்சு இருக்கேன். அவர் ஏஜ்லே நம்ம இவளோ active ஆ இருப்போமான்னு தெரியலையேனு கூட நெனைச்சு இருக்கேன். இன்னிக்கு ஒரு ப்ரோக்ராம் பார்க்கும் பொழுது தான் அந்த உண்மை எனக்கு தெரிஞ்சுது....அப்போலே இருந்து எனக்கு மனசு சரியேயில்லை. என்னால digest பண்ணவை முடியலை. ஏன் கடவுளே இப்படி!!!.ஏன்!!! ஏன்!!! . அவர் , அதான் அந்த சேனல்லே வர , ராமாயண ஹீரோ பெரு கொண்டவர் , காலேஜ்லே நான் சேர்ந்த வருஷம் தான் சேர்ந்தாராம். Basically எங்க 2 பேருக்கும் ஒரே ஏஜ் ஆம் பா .. ஒரே ஏஜாம் பா...என்ன கொடுமை சரவணா. Why God why? Why me?<\b>

Thursday, July 2, 2020

௮ழகு

பத்தில் சிரிப்பு ௮ழகு
இருபதில் கள்ளப் பர்வை ௮ழகு
முப்பதில் பொறுப்பு அழகு
நாற்பதில் நரை அழகு
ஐம்பதில் ஆரோக்கியம் அழகு
௮றுபதில் ஒய்வு அழகு
எழுபதில் அமைதி அழகு
எண்பதிற்கு மேல் எல்லாமே அழகு

எந்த வயதிலும் அன்பு அழகே !!!