Thursday, February 9, 2023

(இசை)வாணி ஜயராம்

 Shrimathi. Vani Jayaram. Praying for her satgadhi .

அவங்க காலமானதிலே இருந்து , ஒரு கேள்வி தொடர்ந்துக்கிட்டே இருக்கு. அவங்க ஏன் தனியா இரு(ற)ந்தாங்க ? பலப்பல விதமா கற்பனை குதிரையை ஓட விட்டு , நிறைய காரணம் கண்டுபிடிச்சு அவங்க தனியா இருந்தது சரி என்று 10 பாய்ண்ட்டும் தவறு என்று 10 பாய்ண்ட்டும் சொல்லி , அவங்களுக்கும் தனியா இருந்திருப்பதை எப்படி தவிர்த்து இருக்கலாம் என்றும் idea சொன்ன எல்லாருக்கும் எனக்கு தெரிஞ்ச ஒரே ஒரு விஷயத்தை சொல்லணும்னு் ஆசை . அது என்னனா


அது அவங்களோட இஷ்டம்”


- உங்கள்

U

Saturday, February 4, 2023

சும்மா ஒரு போஸ்ட்

 சும்மா சும்மா blog எழுதறதுனாலே நான் சும்மா இருக்கிறதா நினைக்க வேண்டாம். எனக்கும் வேலை வெட்டி இருக்கு. சும்மா சொல்லலை நிஜம்மா தான் சொல்றேன். சும்மா , ஏதோ எனக்கு தோன்றதை உங்க கூட share பண்ணலாமேனு , சும்மா உட்கார்ந்து இருக்கிற நேரத்தில் எழுதறேன் . இது நீங்க படிக்க ஒத்த பைசா செலவில்லாம சும்மாவே படிக்கலாம் . நான் இப்படி சொல்றதுனால , நீங்க பாவம் இந்த பொண்ணு சும்மா படிச்சு வைப்போமேனு நினைக்கலாம் . இல்லை இவளுக்கு வேற வேலை இல்லை , சும்மா blog வேஸ்டா இருக்குனு சும்மா கிறிக்கி இருக்கானும் நினைக்கலாம். நீங்க அப்படி நினைச்சாலும் என்னாலே எதுவும் பண்ண முடியாது. “உன்ன சும்மா விடமாட்டேன்”னு மிரட்டவா முடியும். அப்படியே மிரட்டினாலும் , நீங்க சும்மா இருப்பீங்களா? . ச்ச ச்ச கோப்படாதீங்க , நான் அப்படி எல்லாம் மிரட்ட மாட்டேன் . சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். 

எல்லாம் சரி , உண்மையா சொல்லுங்க , நீங்க இத படிச்சுட்டு சிரிசீங்களா் இல்ல முறைசீங்களா? இது சும்மா வெட்டி blog ஆ ? இல்லை சும்மா அதிருதில்ல type blogஆ? எதுவா இருந்தாலும் சும்மா போகாம , comment ல சும்மா உங்க பேரையாவது போட்டு போங்க plz.