Friday, March 15, 2024

பார்க்கில் பராக் பார்க்காதவை ...


தலைப்பு ரொம்ப வித்யாசமா இருக்கா? பார்த்ததை பத்தி எழுதலாம் , பார்க்காததை பத்தியும் கேட்காததை பத்தியும் எழுதலாமா? தப்பில்லை ? கரெக்ட். தப்பு தான். :)

ஆனா நான் இப்போ எழுதப்போறது நான் பார்க்கில் பார்க்காதது பத்தி தான் !!!

கடந்த 3 மாசமா , கால் கட்டு போட்டு (அடிபட்டு ங்க, அந்த அடிக்கு கால் கட்டு போட்டு 20 வருஷம் ஆச்சு ...அதை சொல்லலை ....எப்பா ன்னா அடி , நான் அவருக்கு சொன்னேன் ). 

சொல்ல வந்ததை விட்டு எங்கேயா போய்ட்டேன் கடந்த 3 மாசமா கால் கட்டு போட்டு வீட்டுக்குள்ளேயே சுத்தி சுத்தி கூட வர முடியாம , ஒரே இடத்தில் உக்காந்துக்கிட்டே சுத்தி மட்டும் கையில் கிடைச்சா எதிர்லே வரது யாரா இருந்தாலும் ஒரே போடு , ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது அப்படினு வெறுப்பின் உச்சியில் உட்கார்ந்தே பொழுது கழிச்சேன். 

சரி இந்த நேரத்தை நிறைய உருப்படியா எழுதலாம்னு யோசிச்சா , மண்டை வேலை செய்யவே இல்லை. மூளை ,ஒருக்கால் எனக்கு மட்டும் அடிபட்ட கால்லே இருக்கோ என்னவோ ? ரொம்ப ட்ரை பண்ணி அப்புறம் அந்த முயற்சியே "கை" விட்டுட்டேன் . 

போன வாரம் ஒரு வழியா எனக்கு நடக்கறதுக்கு green சிக்னல் கொடுத்தாச்சு. ரொம்ப தூரம் இல்லைனாலும் பக்கத்துக்கு தெருக்காவது போக முடியுது. பார்க் போக முடியலைனாலும் பார்க் பண்ணி வெச்சு இருக்கற கார் வரைக்குமாவது போயிட்டு வர முடியுது . 2 நாள் வெளியே போயிட்டு வந்ததுனாலே இன்னிக்கி மூளை கொஞ்சம் தூங்கி எழுந்துரிச்சு இருக்கு. நம்ம நட தான் போச்சு எழுத்து நடையாவது இருக்கானு பார்க்க , இன்னிக்கி இந்த blog . படிச்சுட்டு சொல்லுங்க உங்க கமெண்ட்ஸ். என்னைய மாதிரி என் எழுத்தும் மறுபடியும் நடை பழகணுமோ? .

ஒரு விஷயம் இல்லாத அப்போ தான் அதோட அருமை தெரியம் அப்படிங்கறது ரொம்ப உண்மை.

நிறைய விஷயம் அன்றாட வாழ்க்கையே "take it for granted " ஆ எடுத்துக்கறோம் . அதுக்கு ரொம்ப feel பண்ணிட்டேன். ஆனா இந்த 3 மாசம் , நிறைய பேரோட ஒரிஜினல் முகத்தை காட்டிச்சு . அதுவும் நல்லதுக்கு தான் . எது எப்படியோ , இனிமே என் health கால் தூசினு நினைக்காம , காலும் கருத்துமா பாத்துக்கணும் னு காலபைரவர் கிட்டே வேண்டிகிட்டேன் .

நம்பிக்கை ஒருக்காலும் கைவிடாது .

கால் பத்தி நிறையே பேசிட்டேனு (போன்)கால் மேல கால் போட்டு என்னைய  திட்டாதீங்க . 

இப்போ எல்லாம் ஓகே.  (k)all's well that ends well.


Love

-U