பின் தூங்கி முன் எழுந்து,
விடியும் முன் குளித்து , மொழுகி,
பசியறிந்து வயிற்றை நிரப்பி,
வம்சம் வளர்த்து,
3 வேளையும் தவறாமல் , பகிர்ந்தளித்து ,
கல்லானாலும் கணவன் என்றிருந்த ,
பெருந்தேவிக்கு சற்றும் சளைத்தவளில்லை இவள்.
சேர்ந்தே அயர்ந்து, சேர்ந்து எழுந்து ,
சேர்ந்து சமைத்து, சேர்ந்து உழைத்து,
சேர்ந்து சம்பாதித்து , சேர்ந்து நிர்வாகித்து ,
தேவை இருப்பின் , அதிகாரமும் செய்யும் மில்லியனியல் மங்கை.
முன்னவள் தாய்க்கு பின் தாரம்
பின்னவள் தாரத்திற்கு பின் தோழி.
உங்களுக்கு தேவை இன்னொரு தாயல்ல ,
தோள் கொடுக்கும் தோழி என்றுணர்ந்த நாங்கள் மாறிவிட்டோம்.
நீங்கள் ?