Friday, October 23, 2020

Better half



பின் தூங்கி முன் எழுந்து

விடியும் முன் குளித்து , மொழுகி,

பசியறிந்து வயிற்றை நிரப்பி,

வம்சம் வளர்த்து,

வேளையும் தவறாமல் , பகிர்ந்தளித்து ,

கல்லானாலும் கணவன் என்றிருந்த ,

பெருந்தேவிக்கு சற்றும் சளைத்தவளில்லை இவள்.


சேர்ந்தே அயர்ந்துசேர்ந்து எழுந்து ,

சேர்ந்து சமைத்துசேர்ந்து உழைத்து,

சேர்ந்து சம்பாதித்து , சேர்ந்து நிர்வாகித்து ,

தேவை இருப்பின் , அதிகாரமும் செய்யும் மில்லியனியல் மங்கை.


முன்னவள் தாய்க்கு பின் தாரம்

பின்னவள் தாரத்திற்கு பின் தோழி.


உங்களுக்கு தேவை இன்னொரு தாயல்ல , 

தோள் கொடுக்கும் தோழி என்றுணர்ந்த நாங்கள் மாறிவிட்டோம்.

நீங்கள் ?



1 comment:

U does not say that U will agree to whatever you say , but definitely U likes you saying whatever you feel.