Saturday, February 15, 2020

Am I really accommodating?



Happy Valentine’s Day to those who all are dating
And
To those who are married and accommodating !!!


இந்த valentines day விற்கு எனக்கு வந்த ஒரு whatsapp மெசேஜ் இது .


ஏன் spouse என்ற ஒரு உறவு மட்டும் எப்பொழுதும் கமெண்ட் களுக்கும் , நகைச்சுவைக்கும் உள்ளாக்கப்படுகிறது?. நாம் அதிகமாக நேசிப்பதும் வெறுப்பதும் இந்த உறவு தானா ?ஏன் தான் இவரை கட்டிகிட்டேனோ என்று எண்ணிய நாட்களுக்கு நிகராக இவர் தான் எனக்கானவர் என்று எண்ணிய நாட்களும் உண்டே !கல்யாணம் பண்ணாமலே ஜாலியாக இருந்து இருக்கலாமே என்று என்னும் நாம் , உண்மையிலேயே வெறுப்பது கல்யாணத்தையா , இந்த உறவையா இல்லை கல்யாணத்தின் பின் வரும் பொறுப்புகளையா ?கல்யாணம் பண்ணாமல் அம்மா அப்பா விற்கு கடைசி வரை குழந்தைகளுக்கும் கணவருக்கும் செய்யும் அனைத்தையும் செய்ய சொன்னால் , இது போல் புலம்பாமல் இருப்போமா ? இல்லை புலம்புவது நமக்கு நாமே சொல்லி கொள்ளும் ஆறுதலா ?
பிறந்தது முதல் அம்மா , அப்பா , அண்ணன் , அக்கா,தங்கை, தம்பி என்று வளரும் பொழுது அந்த வீட்டின் குணம் பொறுத்தே நம் குணம் அமையும். ஒரு பெட்டிக்குள் செடி வளர்ப்பது போலே . எவ்வளவு பெரிய பெட்டியாக இருந்தாலும் சூரிய ஒளி எங்கே இருந்து வருகிறதோ அதை நோக்கியே செடி வளரும்.அதற்காக அந்த செடி accomodate செய்கிறது என்பது இல்லை.செடியின் இயல்பே அதுவாகி விடுகிறது.அப்படி தானே நாமும்.அதனால் பிறந்த வீட்டில் நாம் accomodate செய்கிறோம் என்ற எண்ணம் வருவதில்லை.
அடுத்ததாக நண்பர்கள்.அவர்கள் நாம் , நமக்கு ஏற்ப தேர்தெடுக்கபடுபவர்கள்.ஒரு puzzle piece போல நமக்கு ஏற்ப பொருந்துபவர்கள்.ஆதலால் acccomodate செய்ய தேவைப்படுவதில்லை.தவிர நாம் அவர்களோடு 24/7 இருப்பதில்லையே.உரசல்கள் வந்தாலுமே சிறிது இடைவெளி குடுத்து , காயம் ஆறிய பின்பு மறுபடி இணைபவர்கள்.
இந்த இரெண்டிலும் இருந்து வேறுபட்டு , ஏன் மற்ற அனைத்து உறவுகளிலிடமிருந்தும் வேறுபடுவது கணவன் மனைவி உறவே. சில நேரம் , தாயாக, தந்தையாக,நண்பராக, ஏன் குருவாக கூட அரிதாரம் பூசும். மீதி அனைத்து உறவுகளில் அவரவர் வாழ்க்கையை வெளியே இருந்து பார்க்கிறோம் அனால் இந்த உறவில் மட்டுமே பகிர்கிறோம் . அதனாலேயே accomodate செய்வதாய் உணர்கிறோம் . உரசல்கள் ஏற்படும் பொழுது , ஸ்தூலமாய் பிரிய சாத்தியமில்லாமல் போவதால் மனதால் பிரிகிறோம்.அது உரசல்களை மேலும் பெரிதாக்கும் என்றெண்ணாமலே. நீ accomodate செய்ய வேண்டும் என்று எண்ணாமல் நாம் accomodate செய்வோம் என்ற எண்ணம் வருமேயானால் மேன்மையே. தம்பி , தங்கைகளிடம் விட்டு குடுக்கும் நாம் , கடைசி வரை , ஊன்றுகோலாய் கூட வரும் துணைக்காக விட்டுகொடுக்க  தயங்குவதில் அர்த்தமில்லையே. கடைசி வரை என் நடை தளராமல் இருக்க , ஒரு உறுதியான ஊன்றுகோல் அவசியமே.அதைவிட அவசியம் நான்  அந்த ஊன்றுகோலை கெட்டியாய் பிடித்துக்கொள்வது.

அன்புடன்

-U

No comments:

Post a Comment

U does not say that U will agree to whatever you say , but definitely U likes you saying whatever you feel.