Friday, April 17, 2020

காதல் என்னும் கணவன்

என்னவனுக்கு காதலாகி கசிந்துருக தெரியாது ,
காதல் என்றால் நான் என்று தெரியும் !

கையில் என் பெயரை கீறிக்கொள்ள மாட்டான் ,
என் கையில் ஏதாவது கீறினால் பதறுவான்.

நீ சாப்பிடாமல் சாப்பிட மாட்டேன் என்று பிதற்ற மாட்டான்,
நான் சாப்பிடும் வரை ஓய மாட்டான்.

நான் காய்ச்சலில் விழுந்தால் தானும் விழ மாட்டான்,
என்னை விட்டு நகரவே மாட்டான்.

அவனுக்கு காதலோழுக பேசத் தெரியாது ,
ஆனால் அவரை , “அவனை” என்னும் காதல் புரியும்!



Sunday, April 5, 2020

என்னவனே....

௮ளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாமே!
அதனால் தான் ௨ன் அழகு என்னை கொல்கின்றதோ?

சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில்லை நீ,
சுருங்கச் சிரித்தே விளங்க வைக்கின்றாய்!

காதலுக்கு கண்ணில்லை என்பர்,
௨ன் காதலன்றி எனக்கு கண்ணே இல்லை!

தாய்க்கு பின் தாரம்.
இத்தாரத்திற்கு, இன்னொரு தாய் நீ!

இப்படி எத்தனையோ    பழமொழிகள் சொன்னாலும்,
நீ என்றென்றும்
என் வாழ்வின் புத்தம் புது மொழி!!! 

Wednesday, April 1, 2020

...

பூமி ௨னக்கானது மட்டுமில்லை,
நீயும் இப்புவியில் ஓர் விருந்தினர், அவ்வளவே!

நீ வானை ௮ளக்கவில்லை,
வானே  உனக்கு படியளக்கிறது!

நீ ௨லகை ௨ள்ளங்கையி்ல் அடைக்கவில்லை,
உலகே, ௨ன்னை உள்ளங்கையில் தாங்குகிறது!

கோபுரத்தின் மேலுள்ள காக்கையாய் , ௨ன் ௭ண்ணம் !
கை கூப்புகிறவர்கள், கோபுரத்தை பார்க்கிறார்களே தவிர, காக்கையை அல்லவே!

இயற்கையும் காலமும் செவ்வன தன் வேலையை செய்து கொண்டு இருக்கிறது.
முடங்கிக் கிடப்பது நீயும் ௨ன் படைப்புகளும் தான்!

இன்றும் உன் படைப்புகள் உன்னை தாக்கவில்லை,
படைத்தவனே காக்கின்றான்.!

எல்லா வாய்ப்புக்களும் மறுப்பிறவி இருப்பதில்லை,
இன்றாவது விழித்துக்கொள் மனிதா!!!