அண்மையில் எனக்கு செருப்பு வாங்குவதற்காக நானும் என்னவரும் ஒரு செருப்பு கடைக்குச் செல்லும் பாக்கியம் பெற்றோம் (!!!!) அது , முன்னொரு காலத்தில் செருப்புக்கு பெயர் போன கடை. இப்பொழுது கொஞ்சம் மாறி , பெயர் போய்விட்ட செருப்பு கடை ஆகிவிட்டது. உங்களுக்கும் சற்று யோசித்தால் கடையின் பெயர் “மாட்டா”மலா போய்விடும். அப்படி மாட்டவில்லை என்றால் ,யோசனைக்கு “டாடா” காட்டி விட்டு மேலே படியுங்கள். (!!!???).
கடையின் உள்ளே நுழைந்த எங்களை ஒரு ஆசாமி முறைத்து பார்த்தார். அவரும் வாடிக்கையாளர் போலும் , என்று எண்ணி கொஞ்சம் வேடிக்கையாளர் ஆன நான் , அவரை பார்த்து சிரிக்க , அவர் ஒரு முறை கூட சிரிக்காமல் ஓரே முறையாய் முறைத்து கொண்டு (கொன்று) இருந்தார். உத்து பார்த்த பின் தான் உத்ரா விற்கு அவர் போட்டு இருந்த சிகப்பு சீருடை தெரிந்தது. ஆஹா , அவரா இவர் என்று எண்ணி அவரிடம் , லேடீஸ் சப்பல்ஸ் பாக்கணும் என்றேன். உடனே அந்த மனுஷன் என்னவொ நான் கேட்க கூடாததை கேட்டது போல் , என்ன கேட்டீங்க என்று , முகத்தில் எரிச்சலோடு ஒரு உருமல் போட்டாரே பார்க்கலாம். அந்த முகத்தில் தெரிந்த எரிச்சல் , செருப்பு என்று ஒன்று , இன்று வாங்கினால் இவரிடம் தான் என்று என்னை முடிவெடுக்க வைத்தது. :)
நானும் சளைக்காமல் அவர் கேள்விக்கு பதிலாக மறுபடியும் , லேடீஸ் சப்பல்ஸ் பாக்கணும் என்றேன். என்னவோ நாங்கள் காசு தர மாட்டோம் என்று கூறியது போல் ஒரு முக பாவனை அவருக்கு. எனக்கு வந்த கடுப்பிற்கு , உரிமை உள்ள , என்னை விட சிறியவராய் இருந்து இருந்தால் , “எடு செருப்ப” என்று கூறி இருப்பேன். அறிமுகம் இல்லாத , மூத்தவர் ஆனதால் , எடுங்க செருப்பை பார்க்கலாம் என்றேன். மீண்டும் அதே எரிச்சலொடு , அது எல்லாம் இங்கே இல்லை என்றார். எனக்கோ பார்த்திபன் ஸ்டைலில் இங்கே இல்லாமல் இங்கிலாந்திலா இருக்கிறது என்று கேட்க எண்ணம். பின்னர் நல்ல செருப்பு வாங்க சென்றுவிட்டு செருப்பில் நன்றாக வாங்கி வர கூடதே என்று , வேற எங்க ஸார் இருக்கு என்றேன். மீண்டும் அதே எரிச்சலோடு , வேண்டா வெறுப்பாக மாடிலே என்று பதில் வந்தது. Lift இருக்கா sir , இது நான். அதெல்லாம் ஒண்ணும் இல்ல. இது நம் சம்பள பாக்கி Salesman. (எனக்கு தெரிந்த வரை சம்பள பாக்கி இருக்கணும் இல்லை notice period ஆ இருக்கணும். நம்ம சம்பள பாக்கினே வச்சுபோமே !!!). பின் மேலே சென்று சிறப்பான செருப்பை வாங்கி வந்து நம்ம sir ஐ வெறுப்பேத்தியாச்சுனு வெச்சுகோங்க. கடையில் இருந்து வந்தது முதலே சில எண்ணோட்டங்கள்.
அந்த கடையில் முதல் மாடியில் , பெண்களுக்கான மற்றும் ஆடவருக்கான காலணிகளும் உள்ளன.கீழ் தளத்தில் சிறுவருக்கான மற்றும் sports shoes உள்ளன.பொதுவாக, வயதானவர்களிலும், நடு வயது பெண்களிலும் முட்டி வலியால் அவதி படுபவர் அதிகம் பேர். குழந்தைகளும் , sports shoe வாங்குபவரும் மாடிப்படி ஏற கூடியவர்களாக தானே இருப்பர். அதன்படி , சிறுவர் மற்றும் sports shoes களையும் மாடியில் வைத்து விட்டு வயதானவர்களுக்கான மற்றும் பெண்டிர்க்கானவைகளையும் கீழ்த்தளத்தில் வைப்பது தானே சரியாய் இருக்கும் !!!. பின் ஏன் அப்படி இல்லை அந்த கடையில். புரியவில்லையே…யாரை கேட்பது. ஓரு வேளை இந்த அளவு கூட வாடிக்கையாளர்களை பற்றிய அக்கறை இல்லாதது தான் அந்த பெயர் போன கடையின் பெயர் போயே போச்சோ போயிந்தேவோ It’s Gone.ஓ……
கடை பெயர் வேண்டுமா? சொல்லமாட்டேனே…….Bye…..Tata Tata Tata….:)
-Love
Urs U
ஒத்த செருப்பு இல்
ReplyDeleteலீங்கோ
சிரிப்பா சிரிச்சு போனோங்கோ.
Sema super Mannie ❤️, kadaiyila unnayave seruppu vaanga alaya vittutanungaleee 😂 .!
ReplyDeleteHaha very nicely written. Wordplays and puns arumai. Sirappa iruku. Keep rocking.
ReplyDeleteThank u sir
DeleteDidn't u go out to get some bat ah?
ReplyDeleteமாட்டா, டாட்டா.........
ReplyDeleteகண்டுபிடிச்சாச்சு
Nice puns ..especially பேர் போன கடை.