Nov 28
மூளையில எழுதி வச்சா,
நினைவழிஞ்சு போகும்ன்னு,
உசிருக்குள்ள எழுதி வெச்சேன்,
நீ போன தேதிய,
சொல்லிச்சென்ற சேதிய.
எல்லாத்தையும் விட்டுப் போன,
என் பாதிய மட்டும் ஏன் கொண்டு போன !
என்ன பார்த்தப்புறம் தான் கண்ண மூடணும்னு உன் நினைப்பு தெரிஞ்சிருந்தா,
உன் பாக்காமலே போயிருப்பேன், உசிரோட வெச்சிருப்பேன்.
நீ கண்ணாடி வளையல் போட்டு, நான் பாத்ததில்லை,
உனக்கு பிடிக்குமேன்னு நான் போட்டு விட்டப் போ, அத பாக்க
நீ இல்ல.
நான் பசியாயிருக்க, நீ சாப்பிட்டதேயில்ல, அதனால் தானோ,
வெறும் வயிறா நான் போட்ட வாய்க்கரிசி உன் தொண்டைக்குள்ள போகவேயில்ல!
நான் முகம் சுருங்கினா, உன் உசிரு வாடும்ன்னு சொன்னவளே,
என் உசிர வாட விட்டு எங்கேயோ பறந்து சென்றவளே!
மறுபடியும் பார்ப்போமா தெரியாது,
என் வலி உனக்கெப்பவும் புரியாது!
உன் மகளா, உன் கூடவே இருந்தேன்
என் உசிரா , நீ உள்ளேயே இருக்க.
காலம் ஆற்றாத ஒரே காயம், அம்மா!!!!
#missingmom
#28nov2006
நீ கலங்கினாலே
ReplyDeleteகண்ணீர் விடுவாள்.
எப்படி அவளால்
உன் அழுகையை
பார்க்க முடியும் ?
அதனால்
நாம் அழுவதற்கு முன்பே
நம்மை விட்டுப் போனாள்...